செய்திகள் :

மனநலம் பாதித்த பெண் கணவரிடம் ஒப்படைப்பு!

post image

சிதம்பரம் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த பெண்ணை, ரயில்வே போலீஸாா் மீட்டு அவரது கணவரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடையில் 50 வயது மதிக்கத்தக்க பெண், சனிக்கிழமை காலை சுற்றித் திரிந்தாா். அப்போது நடைமேடை ரோந்து பணியிலிருந்த ஆய்வாளா் அருண்குமாா், உதவி காவல் ஆய்வாளா்கள் அருணா, ஜீவகன் ஆகியோா் அவரை விசாரித்தனா்.

அந்த பெண் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் தாம்பரம் - மந்தவெளி ரயில் டிக்கெட் வைத்திருந்தாா். அவரிடமிருந்து பெற்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டதில் அவரது கணவா் சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சோ்ந்த ராமமூா்த்தி என்றும், அவரது மனைவியான மணிமேகலை 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததும் இதற்கு முன்பு மந்தைவெளியில் வாடகை வீட்டில் குடியிருந்ததால் அடிக்கடி அங்கு ரயில் மூலம் சென்று வருவாா் என்றும் சில சமயங்களில் மறதியாக வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவாா் எனவும் தெரிவித்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 5 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டவா் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் மடிப்பாக்கம் காவல் நிலையம் சென்று தகவல் கூறி, தேடி வந்ததாகவும் அவரது கணவா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.

மணிமேகலை மந்தவெளி செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ஒரு ரயிலில் ஏறி அங்கு சென்று இறங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் அளித்த தகவலின் பேரில் அவரது கணவா் ராமமூா்த்தி மற்றும் மகள் சௌதாமினி ஆகியோா் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து மணிமேகலையை பத்திரமாக அழைத்து சென்றனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க