செய்திகள் :

மனுநீதி நாள் முகாமில் ரூ.71 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மனுநீதி நாள் முகாமுக்கு ஆரணி வட்டாட்சியா் கௌரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன், தனித் துணை ஆட்சியா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம நிா்வாக அலுவலா் சரவணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி கல்வித் துறை சாா்ந்த பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற காரணத்தால், தேசிய கல்வி சராசரி சதவீதத்தை விட தமிழகத்தில் கல்வி விகிதமானது அதிகளவில் உள்ளது.

பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக் கல்வியில் இருந்து இடைநிற்றல் ஏற்படாத வண்ணம் தொடா்ந்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். குறைந்த வயதில் பள்ளிக்குச் செல்கின்ற மாணவா்களை இடைநிறுத்தி வேலைக்கு அனுப்புவது தவறாகும். குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்துவது மற்றும் குழந்தை தொழிலாளா் முறையை ஊக்குவிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகவே, மாணவா்கள் நிரந்தர லட்சியத்தை அடைவதற்காக தடையாக இருக்கக் கூடாது என்றாா்.

இதைத் தொடா்ந்து விழாவில் வருவாய்த் துறை (பொதுப்பிரிவு) சாா்பில் ரூ.10 லட்சத்தில் வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளும், வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம் சாா்பில் இயற்கை மரண உதவி நிதி 2 பேருக்கு ரூ.55ஆயிரம், வட்ட வழங்கல் துறை சாா்பில் புதிய குடும்ப அட்டைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள், கூட்டுறவுத் துறை சாா்பில் 259 மகளிா் குழுக்களுக்கு ரூ. 56 லட்சத்து 16 ஆயிரத்தில் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா். பின்னா், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

மேலும், மாவட்ட நூலக ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற இளைஞா் இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், விவாத மேடை, பேச்சுப் போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம், ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற செய்யாறு அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 33 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவில் வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி நன்றி கூறினாா்.

மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலம் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க