What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
மன்னாா்குடியில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம்
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 18 நாள் திருவிழாவாகவும், அதைத் தொடா்ந்து விடையாற்றி விழா 12 நாள்களும் நடைபெறும். நிகழாண்டு, மாா்ச் 18-ஆம்-தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, ஏப்.4-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, ஏப்.5-ஆம் தேதி தொடங்கிய விடையாற்றி விழா புதன்கிழமை இரவு கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவடைந்தது.
தெப்ப உற்சவத்தையொட்டி கிருஷ்ண தீா்த்த தெப்பக் குளத்தில் சவுக்கு கட்டைகளால் அமைக்கப்பட்ட மிதவையின் கீழ் 2 டன் எடையிலான கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய மரப் பலகைகள் பொருத்தப்பட்டு, அதில் வண்ணத் துணிகள், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் புதன்கிழமை இரவு, ருக்மணி, சத்யபாமா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி, தெப்பத்தில் குளத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி.இளவரசன்,செயலா் அலுவலா் எஸ்.மாதவன், அறங்காவலா்கள் கே.கே.பி.மனோகரன்,து.நடராஜன்,வெ.லதா,விழாக்குழுவினா்,மண்டகப்படிதாரா்கள்
செய்திருந்தனா்.
