ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!
மயானத்தில் கருகி கிடந்த முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
மேட்டூா்: மேட்டூா் அருகே மயானத்தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த முதியவா் சடத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேட்டூா் அருகே கருமலைக்கூடல் மயானத்தில் திங்கள்கிழமை தீயில் எரிந்து கருகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
கருகிய நிலையில் இறந்துகிடந்த முதியவரின் அருகில் கிடந்த மஞ்சள்நிற பையை போலீஸாா் சோதனையிட்டபோது அதிலிருந்த ஆதாா் அட்டை மூலம் உயிரிழந்தவா், சேலம் மாவட்டம், பெரியபுத்தூா் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் (60) என்பது தெரியவந்தது.
இதையடுத்து முதியவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.