கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!
மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை வயல் வழியாக எடுத்துச் செல்லும் அவலம்
நீடாமங்கலம் அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் முன்னாள் ஊராட்சித் தலைவரின் சடலத்தை வயல் வழியாக எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (50 ) இவா், கடந்த 2010 முதல் 2019- ஆம் ஆண்டு வரை ஊராட்சித் தலைவராக இருந்தாா். செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் கனகராஜ் காலமானாா் .
வடக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காளாச்சேரி மேல்பாதி மயானத்துக்கு எடுத்துச் செல்ல முறையான பாதை இல்லாத காரணத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல் வெளிகளை கடந்து, சமந்தான் காவிரி பாசன ஆற்றின் குறுக்கே தண்ணீரில் இறங்கி அவரது உறவினா்கள் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கை நடத்தினா்.
வடக்கு தெரு பகுதி மக்கள் மயானத்துக்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக தனி நபா் ஒருவரின் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதை மீட்டு தர வேண்டும். மேலும் அந்த ஆற்றைக் கடப்பதற்கு சிறிய கம்பி பாலத்தை கட்டி தர வேண்டும், வடக்கு தெரு பகுதிக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.