செய்திகள் :

மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு... 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!

post image

ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பின்னரும் கடந்த 3 மணி நேரமாக நகராமல் உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் நள்ளிரவு 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், கடந்த 3 மணி நேரமாக நகராமல் உள்ளது.

இந்த புயல் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறையக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 3 இடங்களில் அதி கனமழையும் பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 500 மி.மீ மழை பதிவாகியுள்ளது. புதுவையில் 460 மி.மீ மழை பதிவாகியுள்ளது. புதுவையில் கடந்த 2004-ல் அக்டோபரில் 210 மி.மீ மழை பதிவான நிலையில், தற்போது அதிகபட்சமாக மழை பெய்துள்ளது.

ரோஜா - 2 தொடர் அறிவிப்பு!

ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது. ரோஜா தொடரில... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.பகத் பாசில் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள மொழிப் படமான பொகெயின்வில்லா திரைப்படம் நாளை(டிச. 13) ச... மேலும் பார்க்க

வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலி!

புதுக்கோட்டையில் வீட்டிலேயே உறவினர்களால் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலியானது.புதுக்கோட்டை: அரந்தாங்கியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, பிறந்த சில மணிநேரங்களிலேயே பலியானது. அரந்தாங்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க

கடைசி மழைமேகங்கள்... சென்னைக்கு இன்றிரவோடு மழைக்கு ரெஸ்ட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையை நோக்கி வரும் மழை மேகங்களால் பெய்யும் கடைசி சுற்று தற்போது பெய்யும் மழையாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடு... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தின்போது விபரீதம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுமி பலி!

ஹரியாணாவில் திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டு பாய்ந்து 13 வயது சிறுமி பலியானார்.சண்டிகர்: திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டுப் பாய்ந்ததில் 13வயது ச... மேலும் பார்க்க