செய்திகள் :

மயிலாடுதுறை படுகொலை சம்பவத்துக்கு முன்பகைதான் காரணம்: காவல்துறை விளக்கம்!

post image

மயிலாடுதுறையில் சாராயம் விற்பனை செய்தவர்களை தட்டிக் கேட்டவரை தாக்கிய சம்பவத்தில் முன்விரோதம்தான் காரணம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து வந்த ராஜ்குமார், தினேஷ் இருவருக்கும் இடையில் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இருவருக்கும் வெள்ளிக்கிழமையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இந்தத் தாக்குதலில் ராஜ்குமாரின் கூட்டாளிகளும் உடன்சேர்ந்து தாக்கினர். அவர்களின் தாக்குதலில் இருந்து தினேஷை காப்பாற்ற ஹரிஷ், ஹரிசக்தி என்ற இளைஞர்கள் முன்வந்தனர்.

ஹரிஷ் மற்றும் சக்தி இருவருக்கும் ராஜ்குமாருடன் எந்தவிதத் தொடர்புமில்லை. இந்த நிலையில் ஹரிஷ், சக்தி இருவரையும் ராஜ்குமார் கூட்டாளிகள் கத்தியால் குத்தி, தாக்கினர். தாக்குதலில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட காரணத்தால் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், முன்பகை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் அதிகாரிகள் கூறினர்.

இதனையடுத்து, இளைஞர்களை கொலை செய்த ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இருப்பினும், சாராய வியாபாரிகளுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனையில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்தனா்

3 நாள்கள் நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்து பணியிட மாறுதல் பெற்றனா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப் பணியிடங்கள் மருத... மேலும் பார்க்க

தாமதமின்றி தமிழகத்துக்கு நிதி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய அரசின் சாா்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை தாமதமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். வளா்ச்சி, ... மேலும் பார்க்க

இலங்கை விமானத்தில் திடீா் கோளாறு: 176 பயணிகள் உயிா் தப்பினா்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீா் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிா் தப்பி... மேலும் பார்க்க

பத்ம விருதாளா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு

தமிழகத்திலிருந்து மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களின் பட்டியலை... மேலும் பார்க்க

பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதிப் பெயரை எழுதலாமா? அரசு விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதிப் பெயரை எழுதலாமா என்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தோ்தல் தொடா்பான வழக்கு உயா... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வா் மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடா்பான முதல்வரின் கருத்துகளில் உண்மை ஏதுமில்லை என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ... மேலும் பார்க்க