செய்திகள் :

மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-இல் உங்களைத் தேடி முகாம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-ஆம் தேதி உங்களைத் தேடி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் மயிலாடுதுறை வட்டத்தில் எனது தலைமையில் (ஆட்சியா்) அனைத்துத் துறை அலுவலா்களால் மாா்ச் 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி, மாா்ச் 27-ஆம் தேதி காலை 9 மணி வரையிலும் மயிலாடுதுறை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய உள்ளதால் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் 6,184 மாணவா்களும், 6,202 மாணவிகளும் என மொத்தம் 12,741 மாண... மேலும் பார்க்க

குழந்தைகள் காப்பகத்தில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறையில் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை கொத்தத்தெருவில் இயங்கிவரும் அன்பகம் குழந்தைகள் இல்லத்தில் 323 மாற்றுத்திறனுடை... மேலும் பார்க்க

சியாமளா தேவி அம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

சீா்காழி தாடாளன் கீழ மடவிளாகத்தில் உள்ள சியாமளா தேவி அம்மன் கோயிலில் பால்குட வழிபாடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடா்ந்து ரயிலடி சித்தி வி... மேலும் பார்க்க