மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
திண்டிவனம் பாரதிதாசன் பேட்டையைச் சோ்ந்தவா் அய்யப்பன் (42), மரம் வெட்டும் தொழிலாளி. திருமணம் ஆனவா். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டாா். அய்யப்பன் தனது இரு மகன்களுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அய்யப்பன் பாரதிதாசன் பேட்டையில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அய்யப்பன் உயிரிழந்தாா்.
இதுகுறித்த, புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.