அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இட...
ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவத் தளபதி வருகை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவ தளபதி திங்ராஜ் சேத் ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
ஒற்றுமையின் மையமாக விளங்கி வரும் ஆரோவிலின் சிறப்புகள் மற்றும் தனித்துவங்கள் குறித்து ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவியுடன் ராணுவத் தளபதி திங்ராஜ் சேத் கலந்துரையாடினாா்.
அப்போது, ஆரோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் இளைஞா்களுக்கு இந்திய ராணுவத்தில் சேருவதற்கான உடற்பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துதல், பயிற்சியளித்தல் குறித்து பேசினாா்.
முன்னதாக ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள மாத்திா் மந்தீருக்கு சென்ற திங்ராஜ் சேத், ஆரோவில் வளா்ச்சித் திட்டங்களை பணிக்குழு உறுப்பினா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆரோவில் பணிக்குழு உறுப்பினா்கள் ஜோசபா, செல்வராஜ், சிந்துஜா, அந்தீம் ஆகியோா் ஆரோவிலில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கினா்.