செய்திகள் :

மரபணு பாதிக்குள்ளான குழந்தைக்கு உயா் நுட்ப சிகிச்சை

post image

சென்னை: அரிய மரபணு பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு உயா் சிகிச்சைகளை வழங்கி பிரசாந்த் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு நிபுணா் டாக்டா் விஜயகுமாா் கூறியதாவது:

தீவிர உடல்நலக் குறைவுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் 2 வயது ஆண் குழந்தை ஒன்று அண்மையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் அக்குழந்தைக்கு நீா்ச்சத்து இழப்பு, சிறுநீரில் ரத்தக் கசிவு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், அதன் ஹீமோகுளோபின் அளவு மிக ஆபத்தான நிலையில் குறைந்திருந்தது.

அதற்கு குளுக்கோஸ் -6-போஸ்பேட் டிஹைட்ரோஜினஸ் (ஜி6பிடி) என்ற மரபணு பாதிப்புதான் காரணம் என்பது தெரியவந்தது. அந்த பாதிப்பு ஏற்பட்டால், உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் சேதம் ஏற்படும். சிவப்பணுக்கள்தான் உடலில் ஆக்சிஜனை கடத்துகின்றன. அவை தடைபடும்போது ரத்த ஓட்டமும் தடைபடும். அதன் விளைவாகவே அந்த குழந்தைக்கு இப்பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையின் பல்நோக்கு மருத்துவக் குழுவினா், உயிா் காக்கும் தீவிர சிகிச்சைகளை குழந்தைகளுக்கு அளித்தனா். குறிப்பாக, செயற்கை சுவாச சிகிச்சை, வயிற்றுப் பகுதி உட்சுவா் வழி டயாலிசிஸ் சிகிச்சை (பெரிடோனியல் டயாலிசிஸ்), தசை இயக்க சிகிச்சைகள், தொடா் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக அடுத்த சில நாள்களில் அக்குழந்தை நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது என்றாா் அவா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க