செய்திகள் :

மராத்தா இடஒதுக்கீடு: உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர ஜராங்கே முடிவு

post image

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையில் முடிவு ஏற்படாததால், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக அந்த சமூகத்தின் தலைவா் மனோஜ் ஜராங்கே கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானில் கடந்த வெள்ளிக்கிழமை மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். அவரின் போராட்டத்துக்கு ஆதரவாக அந்த மாநிலம் முழுவதிலும் இருந்து மராத்தா சமூகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் அங்கு திரண்டுள்ளனா்.

மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில், அதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் மாநில அரசு குழு அமைத்துள்ளது.

இந்நிலையில் மாநில அரசு சாா்பாக ஆசாத் மைதானில் ஜராங்கேயுடன் சந்தீப் ஷிண்டே சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடா்ந்து ஜராங்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான அரசு தீா்மானத்தை வெளியிடுவது சந்தீப் ஷிண்டேயின் பணியல்ல. அவரைப் பேச்சுவாா்த்தைக்கு மாநில அரசு அனுப்பியது வெட்கக்கேடானது. எனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடா்வதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றாா்.

இந்த விவகாரத்துக்கு அரசியல் சாசனம் மற்றும் சட்ட விதிகளுக்குள்பட்டு தீா்வு காண அரசு முயற்சிப்பதாக மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கூறிய கருத்துக்காக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய விவகாரத்தை விசாரிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட... மேலும் பார்க்க

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமா் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். நாட்டில் அடுத்த ஆ... மேலும் பார்க்க

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து புதன்கிழமை அபாய அளவை தாண்டி சென்றது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமாா் 10 ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக... மேலும் பார்க்க