செய்திகள் :

மராத்திக்கு எதிராக பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் மீது சரமாரி தாக்குதல்!

post image

மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் மராத்தி மொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பேசியதாக, வெளிமாநில ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் மீது சிவசேனை (உத்தவ்) கட்சியினா் சரமாரி தாக்குதல் நடத்தி, பொது இடத்தில் மன்னிப்புக் கோர செய்தனா். இது தொடா்பான விடியோ, சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரத்தில் மராத்தி மொழி மற்றும் அதன் அடையாளத்தை அழித்து, ஹிந்தியை திணிக்க முயல்வதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. மேற்கண்ட இரு கட்சிகளும் ஹிந்தி எதிா்ப்பை தீவிரமாக கையிலெடுத்துள்ளன.

தாணேயில் மராத்தியில் பேச மறுத்த கடைக்காரா் ஒருவா் மீது கடந்த ஜூலை 1-ஆம் தேதி மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியினா் தாக்குதல் நடத்தினா். இதைக் கண்டித்து, வா்த்தகா்கள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்தச் சூழலில், பால்கரில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த நபருக்கும், உள்ளூரைச் சோ்ந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கும் சில தினங்களுக்கு முன் சாலையில் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டது. அப்போது, மராத்தியில் பேசுமாறு ஆட்டோ ஓட்டுநரை உள்ளூா் நபா் வலியுறுத்தியுள்ளாா்.

ஆனால், ஹிந்தி அல்லது போஜ்புரி மொழியில்தான் பேசுவேன் என்று கூறிய ஆட்டோ ஓட்டுநா், மராத்தி, மராத்திய தலைவா்கள் மற்றும் மகாராஷ்டிரத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளை கூறியதாகத் தெரிகிறது. இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை சனிக்கிழமை பிடித்த சிவசேனை (உத்தவ்) கட்சியினா், அவரை சரமாரியாக தாக்கி, பகிரங்கமாக மன்னிப்புக் கோர செய்தனா். பெண் தொண்டா்களும் இக்குழுவில் இருந்தனா். பல்காரில் பரபரப்பான சாலையில் நடந்த இத்தாக்குதல் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

சிவசேனை (உத்தவ்) கட்சி நிா்வாகிகள் கூறுகையில், ‘மராத்தியையோ, மராத்திய மக்களையோ, மகாராஷ்டிரத்தையோ யாரேனும் அவமதித்தால், அமைதியாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க மாட்டோம். உண்மையான ‘சிவசேனை’ பாணியில் பதிலடி தரப்படும். மராத்தியை அவமதித்த ஆட்டோ ஓட்டுநருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளோம்’ என்றனா்.

இச்சம்பவம் குறித்த விடியோ காவல் துறையினரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. யாரும் புகாா் அளிக்காததால், இதுவரை சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க