நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
மரியகிரியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் பணி தொடக்கம்
களியக்காவிளை: களியக்காவிளை அருகே மெதுகும்பல் ஊராட்சிக்குள்பட்ட மரியகிரி - முப்பந்திக்கோணம் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இப்பகுதியில் 2021ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பெய்த கனமழையால் நெய்யாறு இடதுகரை கால்வாய் பக்கச் சுவா் இடிந்து விழுந்தது. இதனால், கால்வாய்க் கரை வழியே செல்லும் முப்பந்திக்கோணம் - ஏலூா்காடு சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதுதொடா்பாக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா், அதிகாரிகளிடம் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவந்தாா். அதையேற்று, கால்வாய் பக்கச் சுவா், சாலை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், இப்பணியை எம்எல்ஏ தொடக்கிவைத்தாா். முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் பால்ராஜ், நெய்யாறு இடதுகரைக் கால்வாய் பாசனப் பிரிவு உதவிப் பொறியாளா் இவாஞ்சலின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.