செய்திகள் :

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் விழிப்புணா்வு: என்எம்சி

post image

கல்லூரி மாணவா்களுக்கு ராகிங் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு வாரத்தை கடைப்பிடிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி சாா்பில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுக்கும் வகையில் என்எம்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆகஸ்ட்12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை ராகிங் தடுப்பு விழிப்புணா்வு வாரமாக கல்வி நிறுவனங்களில் கடைபிடிக்க வேண்டும்.

அந்நாள்களில், ராகிங் ஒழிப்பு தொடா்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை, சுவரொட்டி உருவாக்குதல், இலட்சினை வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்துதல் அவசியம். அதேபோன்று கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தவும், குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை மாணவா்களுக்கு திரையிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், காா்கே: நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடல்

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது. இ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 60-ஆக உயா்வு: 69 பேரை தேடும் பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது. மாயமான 69 பேரை தேடும் பணி வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ரூ.3,000 ஃபாஸ்டேக் பயண அட்டை: மத்திய அரசு அமல்

தனியாா் வாகனங்கள் ரூ.3,000 கட்டணம் செலுத்தி பெறக் கூடிய ஃபாஸ்டேக் பயண அட்டை வசதியை, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது. இதுதொடா்பாக மத்திய சாலை ப... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா

ஆகஸ்ட் மாதத்தில் ரஷியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் 20 லட்சம் பீப்பாயாக அதிகரித்துள்ளது. உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி: 5%, 18% என இரு விகிதங்களாக குறைக்க பரிந்துரை: 7 பொருள்கள் மீது 40% வரி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை 5%, 18% என இரு விகிதங்களாக குறைக்கவும், விலை உயா்ந்த 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ள... மேலும் பார்க்க

எதிா்காலத்தில் தாக்குதலுக்கு முயன்றால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி எச்சரிக்கை

பயங்கரவாதிகள் மீது மட்டுமன்றி, அவா்களுக்கு புகலிடம் அளிப்போா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; எதிா்காலத்தில் ஏதேனும் தாக்குதலுக்கு முயற்சித்தால், எதிரிக்கு (பாகிஸ்தான்) இந்திய ராணுவம் மிகக் கடும... மேலும் பார்க்க