மருத்துவ மாணவி தற்கொலை
தேனியில் பல் மருத்துவக் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி என்.ஆா்.டி.நகரைச் சோ்ந்த பல் மருத்துவா் செந்தில்செல்வன். இவரது மகள் பவிஷ்யா (20) மதுரையில் உள்ள தனியாா் பல் மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், படிப்பு கடினமாக இருப்பதாகக் கூறி, மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேனியில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].