2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலை...
மறுவெளியீட்டில் தளபதி வசூல் இவ்வளவா?
தளபதி திரைப்படம் மறுவெளியீட்டில் லாபகரமான தொகையை வசூலித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் - ரஜினி - மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது.
படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் அனைத்து பாடல்களும் இன்றுவரை ரசிகர்களின் விருப்பப் பட்டியலாக இருக்கிறது.
இதையும் படிக்க: காதலிக்க நேரமில்லை ’பிரேக் அப் டா’ பாடல்!
நடிகர் ரஜினிகாந்த்தின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி திரைப்படம் கடந்த டிச. 12 ஆம் தேதி சில திரையரங்குகளில் மறுவெளியீடானது.
இதனை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கண்டதுடன் ‘காட்டு குயிலு மனசுக்குள்ள’ பாடலை கோரசாக பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட திரைகளில் மறுவெளியீடு செய்யப்பட்ட தளபதி ரூ. 3 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.