மற்ற மாவட்ட சமத்துவ பொங்கல் விழா
கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் மகாலெட்சுமி, பிருந்தாதேவி மற்றும், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் இணைந்து புத்தாடை அணிந்து சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.