செய்திகள் :

மல்லி தொடரில் இணையும் சந்திரலேகா நடிகை!

post image

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாகஸ்ரீ, மல்லி தொடரில் இணையவுள்ளார்.

சந்திரலேகா தொடருக்குப் பிறகு இதயம் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நாகஸ்ரீ, தற்போது மல்லி தொடரில் இணையவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மல்லி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நிகிதா ராஜேஷ் நாயகியாகவும் விஜய் வெங்கடேசன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மகாலட்சுமி சங்கர், நளினி, நிரஞ்சனா, பாரதி மோகன், கிருத்திகா உள்ளிட்ட பலரின் நடிப்பும் இத்தொடரிக்கான ரசிகர்களைத் தக்கவைத்து வருகிறது.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி அதிக ரசிகர்களைக் கவர்ந்த சந்திரலேகா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாகஸ்ரீ, மல்லி தொடரில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லி தொடர்

சந்திரலேகா தொடருக்குப் பிறகு இதயம் தொடரில் நடித்து கவனம் பெற்ற நாகஸ்ரீ, பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மல்லி தொடரில் இணைந்துள்ளார்.

நாகஸ்ரீ

மல்லி தொடரில் ரேணுகா என்ற பாத்திரத்தில் நாகஸ்ரீ நடிக்கவுள்ளதால், மல்லி தொடரில் மேலும் பல புதிய திருப்பங்களை உருவாக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்படும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

மல்லி தொடரில் இணைந்துள்ள நாகஸ்ரீக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

Chandralekha actress Nagashree act in malli

கூலி ஓடிடி தேதி!

கூலி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப்... மேலும் பார்க்க

ஓடிடியில் கண்ணப்பா!

பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா ஓடிடியில் வெளியாகியுள்ளது.தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிய... மேலும் பார்க்க

ஓடிடியில் நடிகர் தர்ஷனின் சரண்டர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷனின் ‘சரண்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் கௌதமன் கணபதி இயக்கத்தில், தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ’சரண்டர்’. கிரைம்... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனின் மதராஸி: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

திரையரங்குகளில் இந்த வாரம் 5 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன. எந்தெந்தத் திரைப்படங்கள் நாளை(செப். 5) வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.மதராஸிஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி... மேலும் பார்க்க

40 படங்களில் நடித்துவிட்டேன், ஆனால்... துல்கர் சல்மான் பேச்சு!

லோகா திரைப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பேசியுள்ளார். மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று... மேலும் பார்க்க

யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியர்!

யுஎஸ் ஓபனில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் பாம்ப்ரி முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவில் ந... மேலும் பார்க்க