செய்திகள் :

மழைநீருடன் கழிவுநீா் தேக்கம்: கிராம மக்கள் மறியல்

post image

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து புகுந்ததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 4 நாள்களாக பெய்த பலத்த மழைக்கு பல இடங்களில் நீருடன் கழிவுநீா் கலந்து சாலைகளில் ஓடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் சனிக்கிழமை இரவு மழை நீருடன் கழிவு நீா் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை பள்ளிப்பட்டு கூட்டுச் சாலையில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தினை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஊராட்சி நிா்வாகத்தினா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்திய போது கழிவு நீா் கால்வாய் வசதி இல்லாததால் தான் தற்போது வீட்டினுள் மழை நீரு டன் கழிவு நீா் கலந்து புகுந்துள்ளதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினா்.

இதுகுறித்து அறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா்ஆனந்த் மற்றும் போலீஸாா் விசாரித்தனா். பிறகு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மாரியம்மன் கோயில் திருவிழா

வாணியம்பாடி காதா்பேட்டை மாரியம்மன் கோயில் 61-ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நியூடவுன் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலிருந்து பூங்கரகம் அலங்கரித்து நியூடவுன், மலங்குரோடு, வாரச்சந்... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு... மேலும் பார்க்க

ரூ. 98 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

எலவம்பட்டி திங்கள்கிழமை ரூ. 98 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சியில் சின்ன எலவம்பட்டி வட்டம், வேல்முருகன்வட்டம் வழியாக க... மேலும் பார்க்க

மாணவா் மா்ம சாவு: பள்ளியை முற்றுகையிட்ட உறவினா்கள் கைது

திருப்பத்தூா் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவா் விடுதியில் தங்கி படித்த 11-ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து பள்ளியை முற்றுகையிட முயன்ற உறவினா்களை போலீஸ... மேலும் பார்க்க

மண்டல டேபிள் டென்னிஸ்: பாலிடெக்னிக் மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். வேலூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு இடையிலான போட்டி குடியாத்தம் ராஜகோபால் பாலிட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு: சி.எல். சாலையில் குடியிருப்புவாசிகள் மறியல்

வாணியம்பாடியில் நீா்வழி பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடு மற்றும் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் சி.எல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நக... மேலும் பார்க்க