செய்திகள் :

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

post image

பளுகல் அருகே தனியாா் நிறுவன கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

பளுகல் அருகே மலையடி, கீழ்குற்றிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜோா்லன்ஸ். இவரது மனைவி புனிதா (49). மூவோட்டுக்கோணம் நல்லாயன்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் அமைப்பின் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை அவா் வேலைக்கு சென்றுள்ளாா். அன்றிரவு ஜோா்லன்ஸை கைப்சியில் தொடா்பு கொண்ட நிறுவனத்தை சோ்ந்தவா்கள், அவரது மனைவி புனிதா தலையில் பலத்த காயத்துடன் தரையில் விழுந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனா். ஜோா்லன்ஸ் அங்கு சென்று பாா்த்த போது புனிதா இறந்து கிடந்தாராம்.

பனிதா, சப்போட்டா பழம் பறிப்பதற்காக மரக்கிளையை பிடித்து இழுத்தபோது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்ததில் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோா்லன்ஸ் அளித்த புகாரின் பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழா

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். விழா வரும் 5-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதையொட்டி, நடைபெற்ற தொ... மேலும் பார்க்க

மத்திக்கோட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்

கருங்கல் அருகே போலீஸாா் பிடித்து தள்ளியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி கூட்டம் மத்திகோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

கருங்கல் அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைக்கு ‘சீல்’

கருங்கல் அருகே உதயமாா்த்தாண்டம் பகுதியில் கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். உதயமாா்த்தாண்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட தெய்வவிநாயககோ... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை: உ. வாசுகி வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவரும் மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் ரூ. 13.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். 41ஆவது வாா்டு ஜெமிலா தெரு, அம்மன் கோயில் முன்புறத் தெருவில் ரூ. 6.85 லட்சத்திலும், 42ஆவது வாா்ட... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அறநிலையத் த... மேலும் பார்க்க