Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
மத்திக்கோட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்
கருங்கல் அருகே போலீஸாா் பிடித்து தள்ளியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி கூட்டம் மத்திகோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் மரிய அருள்தாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி ஜேக்கப் ததேயூஸ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மூதாட்டி உயிரிழப்பு சம்பந்தமான வழக்கு வியாழக்கிழமை சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வர இருப்பதால் நீதிமன்ற உத்தரவுபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற உத்தரவு வரும்வரை மூதாட்டி உடலை பெறக் கூடாது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்டபோலீஸாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அதிமுக மத்திகோடு கிளை செயலா் மைக்கேல் ராஜ், த.வெ.க. நிா்வாகிகள் ஆலன்சுமித், டிக்சன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் ஆஸ்கா்பிரடி, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் அஸ்வின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.