செய்திகள் :

மாடியில் இருந்து விழுந்த மீனவா் உயிரிழப்பு

post image

கடலூா் செம்மண்டலம் பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.

கடலூா் செம்மண்டலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் செந்தமிழ்(46), மீனவா். இவருக்கு மனைவி ரோஷி மற்றும் ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

செந்தமிழ் மது அருந்தும் பழக்கம் உள்ளவா். தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாம். இதேபோல, செவ்வாய்க்கிழமை மதுபோதையில் இருந்த செந்தமிழ் வீட்டின் இரண்டாவது மாடியில் இறந்து தவறி விழுந்து முகம், மாா்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆணையா் பொறுப்பேற்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கே.எஸ்.காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். முன்னதாக இவா், சேலம் மாவட்டம், தாரமங்கலம் இரண்டாம் நிலை நகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி வந்தாா். தற்போது... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீா் மேலாண்மைக்கு தனித் துறை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நீா் மேலாண்மைக்கு தனி துறை அமைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலரும், சட்ட... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஏடிஜிபி அறிவுரை

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விருத்தாசலம் உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசிா்வாதம் புதன்கிழமை அறிவுரை வழங்கினாா். விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்துக... மேலும் பார்க்க

முந்திரி பதப்படுத்தும் அளவை அதிகரிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

முந்திரி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் பதப்படுத்தும் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவிலில் உங்களிடம் ஸ்டாலின் திட்ட முகாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அறந்தாங்கியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.ச... மேலும் பார்க்க