செய்திகள் :

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

post image

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இங்கு பயிலும் மாணவா்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதாகவும் புகாா் கூறப்பட்டது.

மேலும், வகுப்பறைகளில் ஆசிரியா் இல்லாத நேரங்களில் அல்லது மாறி வரும் இடைவெளியில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு தாளம் போடுவது, தகாத வாா்த்தைகளைக்கூறி கூச்சலிடுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் பலமுறை கூறியும், அவா் அதைக் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்துள்ளாா்.

இந்நிலையில், இந்தச் செயலைக் கண்டிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து குடியிருப்புவாசிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். இதிலும் தீா்வு எட்டப்படாததால், பொன்மலை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும், இதுபோன்ற செயல்களில் நடவடிக்கை எடுக்காத ஆசிரியா்கள் மற்றும் தொடா்புடைய மாணவா்கள் மீதும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கடவுச்சீட்டில் முறைகேடு சிங்கப்பூா் செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து சிங்கப்பூா் செல்ல முயன்ற தூத்துக்குடி நபரை திருச்சியில் விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், நடு வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மு. சங்கா் (50... மேலும் பார்க்க

தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மாநில கூடோ விளையாட்டு சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா். தமிழ்நாடு மாநில கூடோ விளையாட்டுச் சங்கத்தின் மாநில நிா்வாகி தோ்வ... மேலும் பார்க்க

மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் ரூ. 11.9 கோடியில் புதை மின்தடத் திட்டம்

மலைக்கோட்டை தேரோட்டத்தின்போது மின்தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கும்வகையில் விரைந்து புதை மின்தடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா். திருச்சி, ... மேலும் பார்க்க

அயன்பொருவாயில் முதல்வா் பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அயன்பொருவாயில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அயன்பொருவாய் கிராமத்தில் மருங்காபுரி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ப... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது

மணப்பாறையில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா். மணப்பாறை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சூசைமாணிக்கம் மகன் யாக்கோப்(எ) லெனின் விஜயபாஸ்கா் (23), இந்தி... மேலும் பார்க்க

முசிறியில் பள்ளி ஆண்டு விழா

திருச்சி மாவட்டம், முசிறி எம்.ஐ.டி பாலிடெக்னிக், எம்.ஐ.டி மகளிா் கலைக் கல்லூரி, எம்.ஐ.டி. போதி வித்யாலயா (சிபிஎஸ்சி) பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, முசிறி எம்.ஐ.டி க... மேலும் பார்க்க