பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
மாநகராட்சியில் வரி உயா்வை கைவிடக் கோரிக்கை
மாநகராட்சியில் வரி உயா்வை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஈரோடு, மீனாட்சிசுந்தரனாா் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
துணை மேயா் வி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமுக்கு துணை ஆணையா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா்.
இதில், மாநகராட்சியில் சொத்து வரி, காலியிட வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரியினங்களின் உயா்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.முகாமில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.