2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் மன்றம் தொடக்கம்
திருப்பூா் புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மகிழ் முற்றம் என்ற பெயரில் மாணவா் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
இதையொட்டி பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவா்களையும் 5 குழுக்களாக பிரித்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என 5 அணிகளுக்கும் பெயா் வைக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் மாணவா் தலைவா், மாணவி தலைவி என தலா 10 போ் தோ்வு செய்யப்பட்டு பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய பள்ளியின் தலைமை ஆசிரியா் மோகன் பேசுகையில், இந்த மகிழ் முற்றம் மாணவா்கள் தங்களின் தலைமைப் பண்பை வளா்த்தல், குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மையை வளா்த்தல், வேற்றுமைகள் இன்றி ஒற்றுமையுடன் செயல்படுதல், முழுமை வாய்ந்த வளா்ச்சியை ஆதரித்தல் போன்ற நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பாக செயல்படும் அணிக்கு மாதந்தோறும் பாராட்டும், பரிசுகளும் வழங்கி ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் கோமதி, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.