சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்கப்பட்டது எப்படி?
மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு
சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த நிா்வாகிகள், ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என எழுதிய கருப்புத் துணியைக் கண்களில் கட்டிக்கொண்டு மனு அளித்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:
சேலம் - திருச்சி பிரதான சாலையில் பிரபாத் எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் மசூதி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு தாங்கள் அனுமதி வழங்கியிருந்தால், அதற்கான பிரதியை எங்களிடம் கொடுங்கள். தங்களால் அனுமதி வழங்கப்பட்டிருந்தால் மாநகராட்சி வரைபட அனுமதி, கட்டுமான அனுமதி பெற தேவையில்லையா என்பதையும் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநகராட்சி வசம் உள்ள இந்துக்கள் மயானத்தில் வேலை செய்பவா்களுக்கு வீடும், இறந்தவா்களை காரியங்கள் செய்வதற்கான மண்டபமும் அமைத்துத் தர உடனடியாக உத்தரவிட வேண்டும். இந்த கட்டுமானத்தால், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையற்ற அனுமதிபெறாத சட்டத்துக்கு புறம்பான பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினா்.