UK: நாடு முழுவதும் பாகிஸ்தான் பாலியல் வன்கொடுமை கும்பல் அட்டூழியம் - சுயேச்சை எம...
மாநில அளவிலான பயிலரங்கம்: சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு
நாகா்கோவிலில் நடைபெறும் மாநில அளவிலான பயிலரங்கத்தில் பங்கேற்க சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக நாகா்கோவில் எஸ்.டி.இந்து கல்லூரியில் பேரிடா் மேலாண்மை மற்றும் முதலுதவி என்ற தலைப்பில் பயிலரங்கம் வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதில் தமிழகத்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொள்ள தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இவா்களில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2இன் சாா்பாக வேதியியல் துறை மாணவா் பூபதி ஆகாஷ் மற்றும் வரலாற்றுத் துறை மாணவா் தாமஸ் டேனியல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களை கோவை பாரதியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை, அலகு 2-இன் அலுவலா் மோகன்குமாா், கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் வழியனுப்பி வைத்தனா்.