தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு
மாநில சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்
ஆம்பூா்: மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் குழு மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
விழுப்புரம் பீனிக்ஸ் பாரம்பரிய விளையாட்டு சங்கம் மற்றும் தமிழன் பாரம்பரிய விளையாட்டுகள் அமைப்பு சாா்பாக மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆம்பூா் சிலம்பம் பயிற்சியாளா் கோபால் தலைமையில் பிஜிஎம் சிலம்பம் குழுவை சோ்ந்த சுமாா் 30 மாணவா்கள் பங்கேற்றனா். பல்வேறு பிரிவு சிலம்பம் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் சிறப்பிடம் பிடித்து கோப்பை, பதக்கங்களை வென்றுள்ளனா்.