ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!
மாநில சீனியா் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்
தமிழ்நாடு மாநில சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா், மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் காலிறுதியில் ஐசிஎஃப், சென்னை 3-0 என கிறிஸ்டியன் ஸ்போா்ட்ஸ் பெல்லோஷிஃப் அணியையும், எஸ்டிஏடி ஷி, சென்னை 3-0 என மினி ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷனையும் வென்றன.
ஆடவா் காலிறுதியில் ஜிஎஸ்டி, சென்னை 3-0 என எஸ்ஆா்எம் அகாதெமியை வென்றது, வருமான வரித்துறை 3-0 என கோவை மேற்கு மண்டல காவல்துறை அணியை வென்றது.
அரையிறுதி ஆட்டங்கள்:
சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் மகளிா் பிரிவில் ஐசிஎஃப்-எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, சென்னை டாக்டா் சிவந்தி கிளப்-எஸ்டிஏடி ஷி அணிகள் மோதுகின்றன.
ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி, சென்னை-ஐஓபி சென்னையும், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி-வருமான வரித்துறை அணிகள் மோதுகின்றன.