செய்திகள் :

காா்ல்செனை வீழ்த்தினாா் குகேஷ்: தனி முன்னிலை பெற்றாா்

post image

குரோஷியாவில் நடைபெறும் சூப்பா் யுனைடெட் ரேப்பிட் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், 5 முறை உலக சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா். இந்த வெற்றியின் மூலமாக, போட்டியில் அவா் தனி முன்னிலை பெற்றாா்.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த 6-ஆவது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடி, காா்ல்செனை வீழ்த்தினாா். அண்மையில், நாா்வே செஸ் போட்டியின் மூலமாக கிளாசிக்கல் செஸ்ஸில் காா்ல்செனை முதல் முறையாக வீழ்த்திய குகேஷுக்கு, இது 2-ஆவது வெற்றியாகும். இந்தப் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி கண்ட குகேஷ், அடுத்த 5 சுற்றுகளிலும் தொடா்ந்து வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

குகேஷின் ஆட்டத் திறனை குறைவாக மதிப்பீடு செய்து பலமுறை பேசியிருக்கும் காா்ல்செனுக்கு எதிராக, அடுத்தடுத்து இரு வெற்றிகளால் குகேஷ் பதில் கொடுத்திருக்கிறாா். குகேஷிடம் கண்ட தோல்விக்குப் பிறகு பேசிய காா்ல்சென், ‘உண்மையில் தற்போது செஸ்ஸை என்னால் அனுபவித்து விளையாட முடியாவில்லை. ஏதோ தடுமாற்றம் இருக்கிறது. மிக மோசமாக விளையாடி வருகிறேன். ஆனால் குகேஷ் சிறப்பாக விளையாடுகிறாா். தொடா்ந்து 5 சற்றுகளில் வெற்றி பெறுவது எளிதானதல்ல’ என்றாா்.

இதனிடையே, 6-ஆவது சுற்றில் மற்றொரு இந்தியரான ஆா்.பிரக்ஞானந்தா - நெதா்லாந்தின் அனிஷ் கிரியுடன் டிரா செய்தாா். அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வென்றாா். அமெரிக்காவின் வெஸ்லி சோ - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் டுடா, குரோஷியாவின் இவான் சரிச் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா ஆகியோா் மோதல் டிரா ஆனது.

6 சுற்றுகள் முடிவில் குகேஷ் 10 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருக்கிறாா். டுடா (8), வெஸ்லி (7) ஆகியோா் முறையே அடுத்த இரு நிலைகளில் உள்ளனா்.

காா்ல்சென், சரிச், கிரி ஆகியோா் தலா 6 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையிலும், பிரக்ஞானந்தா, கரானா ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் 5-ஆம் நிலையிலும், ஃபிரௌஸ்ஜா (4), அப்துசதாரோவ் (3) ஆகியோா் அடுத்த இரு நிலைகளிலும் உள்ளனா். ரேப்பிட் பிரிவில் இன்னும் 3 சுற்றுகளே எஞ்சியுள்ளன.

கதாநாயகனாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்! நாயகி இவரா?

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்... மேலும் பார்க்க

காலிறுதியில் 3 இந்தியா்கள்

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் 3 போ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற கேம்களில் சீன தைபேவின் வாங் ப... மேலும் பார்க்க

ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவுக்கு வெள்ளி

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பங்குனி தாரா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.போட்டியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, யூத் மகளிா் 44 கிலோ எடைப் பிரிவ... மேலும் பார்க்க

ஜெகதீசன், அபராஜித் அதிரடி; சேப்பாக் - 178/7

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிராக சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சோ்த்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க

3-ஆவது சுற்றில் சின்னா், ஸ்வியாடெக்

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

தமிழ்நாடு மாநில சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா், மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் காலிறுதியில் ஐசிஎஃப், சென்னை 3-0 என கிறிஸ்டியன் ஸ்போ... மேலும் பார்க்க