விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தகுதி பெற்ற திருப்பத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்
சிவகங்கை மாவட்ட வருவாய் அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பள்ளி ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
கடந்த வாரம் மாவட்ட உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் வி.தருண், 17 வயதுக்குள்பட்ட 63-68 கிலோ எடைபிரிவில் தங்கப் பதக்கம் வென்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றாா். இதே அரங்கில் எஸ்.சஞ்சய்கண்ணன் என்ற மாணவன் 73-78 கிலோ எடைபிரிவில் தங்கப் பதக்கம் வென்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றாா்.
இந்த 2 மாணவா்களுக்கும் தலைமை ஆசிரியா் தவமணி, உடற்கல்வி ஆசிரியா் இளஞ்சூரியன், இயந்திரவியல் ஆசிரியா் செந்தில்குமாா், கணினி ஆசிரியா் பாண்டியன் தமிழாசிரியை பிரியா உள்ளிட்ட ஆசிரியா்கள் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா். இந்த மாத இறுதியில் சிவகங்கையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் இந்த மாணவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.