மானாமதுரைக்கு புதிய போலீஸ் டி.எஸ்.பி. நியமனம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளராக பாா்த்திபன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் காரைக்குடியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பாா்த்திபன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு மானாமதுரை டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டாா். தமிழக உள்துறை செயலா் இதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.