செய்திகள் :

மானாமதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

post image

மானாமதுரையில் பேருந்து நிலையம் அருகே புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இந்த சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, மானாமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி தலைமை வகித்தாா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று குத்து விளக்கேற்றி வைத்தாா்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, ஆணையா் கண்ணன், துணைத் தலைவா் பாலசுந்தரம், வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், மாவட்ட மருத்துவ சுகாதார அலுவலா் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலா் மாா்க்கண்டன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் க.பொன்னுச்சாமி முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனி... மேலும் பார்க்க