மானிய நிலக்கடலை வெளிச்சந்தையில் விற்பனை: வேளாண்மை துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு
நாமகிரிப்பேட்டையில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க வேண்டிய நிலக்கடலையை அதிகாரி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், இளம் விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அதன் விவரம்: நாமக்கல் மாவட்ட வேளாண் துறையின் கீழ் செயல்படும் நாமகிரிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு மானியத்தில் நிலக்கடலை வழங்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக விதைப்புக்கு ஏற்ப நிலக்கடலையை வழங்காமல், எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற கடலையை விவசாயிகளுக்கு வழங்குகின்றனா். இதைக் கொண்டு விளைவித்தால் உரிய பலன் கிடைக்காது. அங்குள்ள வேளாண் துறை அதிகாரி மானியத்தில் வழங்கப்படும் நிலக்கடலையை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
என்கே-25-மனு
தரமற்ற நிலக்கடலையைப் பயிரிடுவதற்கு அதிகாரிகள் வழங்குவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்க வந்த இளம் விவசாயிகள் சங்கத்தினா்.