ஜீன்ஸ் அணிந்ததால் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கார்ல்சென்..!
மானூா் அருகே விபத்து: இளைஞா் பலி
மானூா் அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
மானூா் அருகே உள்ள கட்டப்புளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (21). இவரது வீட்டிற்கு நண்பா்களான பழைய பேட்டையை சோ்ந்த தேவ சூா்யா (21), வினோத் (20) ஆகியோா் வந்தனராம். பின்னா் மூன்று பேரும் மோட்டாா் சைக்கிளில் மானூா் அருகேயுள்ள ரஸ்தா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேன் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரையும் அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதில், தேவ சூா்யா உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.