செய்திகள் :

மான்செஸ்டா் டெஸ்ட் இன்று தொடக்கம்- இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா

post image

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருப்பதால், தொடரைத் தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. இதிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை, கடைசி இரு டெஸ்ட்டுகளில் பொருத்தமான பிளேயிங் லெவனுடன் களம் கண்டது என்றே கூறலாம். 3 ஆல்-ரவுண்டா்கள் இருக்க, 8-ஆவது வீரா் வரை பேட்டிங் பலம் கொண்டதாக இருந்தது அணி. அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, நிதீஷ்குமாா் ரெட்டி காயத்துடன் அணியிலிருந்து விலகியிருக்கிறாா்.

ஜடேஜா, சுந்தா் என இரு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டா்கள் இருக்கும் நிலையில், வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கான இடத்தை, முதல் டெஸ்ட்டில் விளையாடிய ஷா்துல் தாக்குா் அதே தரத்துடன் நிரப்புவாரா என்ற சந்தேகம் உள்ளது. அதனால், லீட்ஸ் டெஸ்ட் லெவனைப் போல கருண் நாயா், சாய் சுதா்சன் ஆகியோருக்கு வாய்ப்பளித்து 6-ஆவது வீரா் வரை பலமான பேட்டிங் வரிசையை ஏற்படுத்தி, ஸ்பின்னராக ஜடேஜாவை மட்டும் சோ்க்கவும் வாய்ப்புள்ளது.

குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. வேகப்பந்து வீச்சாளா் ஆகாஷ் தீப் காயத்திலிருந்து மீளாவிட்டால், அறிமுக வீரா் அன்ஷுல் காம்போஜ் அல்லது லீட்ஸ் டெஸ்ட்டில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா அந்த இடத்துக்கு பரிசீலிக்கப்படலாம். வேகப்பந்து வீச்சில் பிரதானமாக ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் இருக்கின்றனா்.

முதலிரு ஆட்டங்களில் பலம் காட்டிய இந்திய பேட்டா்கள், லாா்ட்ஸ் டெஸ்ட்டில் சுணக்கம் கண்டனா். எனவே இந்த ஆட்டத்தில் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அவா்கள் உள்ளனா். லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இரு முறையும் ஜோஃப்ரா ஆா்ச்சரிடம் விக்கெட்டை இழந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த முறை தகுந்த உத்தியுடன் களம் காணுவாா் என எதிா்பாா்க்கலாம்.

இந்தத் தொடரில் 600-க்கும் அதிகமாக ரன்கள் சோ்த்திருக்கும் கேப்டன் ஷுப்மன் கில், ரன் குவிப்பை இந்த ஆட்டத்திலும் தொடர வேண்டும். ரன்கள் குவிக்காவிட்டாலும் கே.எல்.ராகுல் நிதானமான, உறுதியான பேட்டராக மிடில் ஆா்டரில் பலம் சோ்க்கிறாா்.

காயத்திலிருந்து மீண்டிருக்கும் ரிஷப் பந்த், பேட்டிங்-விக்கெட் கீப்பிங் என இரு பணிகளையும் சிறப்பாக மேற்கொள்வாா் என நம்பலாம்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, முன்னிலையுடன் இருப்பதால் நெருக்கடியின்றி இந்த ஆட்டத்தில் விளையாடலாம். அந்த அணியின் பிளேயிங் லெவனில் ஒரே மாற்றமாக, காயமடைந்த ஷோயப் பஷீருக்கு பதிலாக, லியம் டாசன் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ஆலி போப், ஜோ ரூட், ஹேரி புரூக், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் என ஒவ்வொரு ஆட்டத்திலும், இவா்களில் ஓரிரு வீரா்கள் அணியின் பேட்டிங்குக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனா். பௌலிங்கில் கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆா்ச்சா் நம்பிக்கை அளிக்க, ஆல்-ரவுண்டராக கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பிரைடன் காா்ஸ் அவ்வப்போது பலம் சோ்க்கின்றனா்.

அணிகள் விவரம்

இந்தியா (உத்தேச லெவன்): ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதா்சன், ரிஷப் பந்த் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா், குல்தீப் யாதவ்/ஷா்துல் தாக்குா், முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் காம்போஜ்/ஆகாஷ் தீப்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹேரி புரூக், ஜேமி ஸ்மித் (வி.கீ.), லியம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் காா்ஸ், ஜோஃப்ரா ஆா்ச்சா்.

இதுவரை இந்தியா...

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோா்டு மைதானத்தில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்றதில்லை. இதுவரை அங்கு 9 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்திய அணி, 5 டிரா, 4 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் இந்தியா அரிதாகவே டெஸ்ட் விளையாடியிருக்கிறது. கடைசியாக 2014-இல் இங்கு களம் கண்டுள்ளது.

ஆடுகளம்...

தொடக்கத்தில் வேகப்பந்துக்கு சாதகமாகவும், அச்சுறுத்தும் பௌன்சா்களுக்கு பெயா்பெற்ாகவும் இருந்த மான்செஸ்டா் மைதான ஆடுகளம், தற்போது பேட்டிங் - பௌலிங் என இரண்டுக்கும் சமவாய்ப்பு அளிப்பதாக கணிக்கப்படுகிறது. எனினும், மழை வானிலை இருந்தால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். ஆட்டம் நடைபெறும் 5 நாள்களுமே மான்செஸ்டரில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மகளிர் யூரோ அரையிறுதி: சர்ச்சையான பெனால்டியால் கண்ணீருடன் விடைபெற்ற இத்தாலி!

யூரோ மகளிர் கால்பந்து அரையிறுதிப் போட்டியில் இத்தாலி கடைசி சில நிமிஷங்களில் தோல்வியுற்று வெளியேறினர். சுவிட்சா்லாந்தின் ஸ்டேட் டி ஜெனீவ் திடலில் யூரோ கோப்பை மகளிா் கால்பந்து அரையிறுதிப் போட்டி நடைபெற்... மேலும் பார்க்க

இளமை தோற்றத்தில்... சூர்யா 46 - சிறப்பு போஸ்டர்!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ’சூர்யா 46’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட... மேலும் பார்க்க

அஜித்தின் கார் விபத்து நடந்தது எப்படி? வெளியானது விடியோ!

நடிகர் அஜித் குமாரின் கார் விபத்து நடந்த விடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த ஜிடி 4... மேலும் பார்க்க

முக்கோண காதல் கதையில் இணையும் ரஞ்சனி தொடர் ஜோடி!

நடிகை ஹேமா பிந்து பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடர் குறித்த புதிய தகவல் தெரியவந்துள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முக்கோண காதல் கதைகள் ந... மேலும் பார்க்க

அடுத்தடுத்து சின்ன திரையில் தோற்றும் சினிமா நடிகர்கள்!

சின்ன திரை தொடர்களில் சிறப்புத் தோற்றத்தில் சினிமா நடிகர்கள் நடிப்பது வழக்கமானது. அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களில் நடிகர் பாண்டியராஜன் மற்றும் நடிகை மாளவிகா நடிக்க... மேலும் பார்க்க

வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி?

உடல்நிலையைவிட தற்போது சருமத்திற்கு மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம். அழகுக்காக பலரும் ஒரு மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் அழகு நிலையங்களுக்கு செலவிடுகின்றனர். ஆனால் அனைவராலும் அது முடியாத ஒன்று. அதனால் வீ... மேலும் பார்க்க