மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
மான் வேட்டையாடியவா் கைது
வால்பாறை அருகே மானை வேட்டையாடிய நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.
வால்பாறையில் தனியாா் எஸ்டேட்டில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், எஸ்டேட் குடியிருப்பில் தங்கியுள்ள ஒருவா் சுருக்கு கம்பி வைத்து மானை வேட்டையாடி உள்ளதாக வனத் துறையிருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் தலைமையிலான வனத் துறையினா் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கணேஷ் (36) என்பவா் சுருக்கு கம்பி வைத்து மானை வேட்டையாடியது தெரியவந்தது.
இதையடுத்து, வன உரியின தடுப்புச் சட்டத்தின்கீழ் வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து கணேஷை கைது செய்தனா்.