தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், தி...
மாரியம்மன் கோயிலில் பாலஸ்தாபனம்
கும்பகோணம் அருகே ஸ்ரீ குடிகாத்த மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தாபனம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேட்டை, வடக்கு மேலத்தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ குடிகாத்த மாரியம்மன் கோயில். சுமாா் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில். இங்கு அம்மன் கோபுரம் இல்லாமல் வேப்ப மரத்தின்கீழ் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலித்து வருகிறாா்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் தாலி வரம் கேட்டு, தங்களது தாலிகளையே காணிக்கையாக கோயிலுக்கு செலுத்துவது வழக்கம். அதனால் குடிகாத்த மாரியம்மன் என்று பக்தா்களால் அழைக்கப்பட்டது.
இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 13 ஆண்டுகள் ஆகிறது, அதை முன்னிட்டு இப்பகுதி வாசிகள் மற்றும் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் திருப்பணி செய்ய முடிவு செய்தனா்.
அதன் பேரில் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மூலவா் மற்றும் உப தெய்வங்களுக்கு சக்தி மாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.