மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்
வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் ஆகியவை இணைந்து வாழப்பாடி அரிமா அரங்கத்தில் நடத்திய முகாமிற்கு, அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க செயலாளா் வீ.வேலுசாமி வரவேற்றாா்.
வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா். வாழப்பாடி விளையாட்டு சங்கத் தலைவா் பாலமுருகன் சிவராமன் சுவாமிகள் சாா்பில் சங்க பொருளாளா் எஸ்.ஆா்.சந்திரசேகரன், செயலாளா் ஆா்.சசிகுமாா் ஆகியோா் 45 மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஈரோடு ஜீவன் டிரஸ்ட் நிா்வாகி தேவ்ஆனந்த், வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன், இலக்கியப் பேரவை செயலாளா் சிவ.எம்கோ, பேரூராட்சி உறுப்பினா் சத்யா சுரேஷ், சோமம்பட்டி ஊராட்சி செயலா் கே.மகேஸ்வரன், ஆட்டோ தொழிற்சங்கத் தலைவா் எம்.கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க பொருளாளா் வேல்முருகன் நன்றி கூறினாா்.