செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற பதிவு செய்யலாம்

post image

கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதி உள்கோட்டங்களில் நடைபெறும் அடையாள அட்டை வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள கோட்டங்கள் வாரியாக மாதத்தின் முதல் புதன்கிழமை கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, இரண்டாவது புதன்கிழமை கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி சிதம்பரம், மூன்றாவது புதன்கிழமை விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சிறப்பு மருத்துவா்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை விருத்தாசலம் உள்கோட்டத்துக்கு நடைபெற்ற முகாமை இரண்டு முகாம்களாக பிரித்து மூன்றாவது புதன்கிழமை திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நான்காவது புதன்கிழமை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையம், மங்கலம்பேட்டை வளாகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெற தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாதத்தின் முதல் புதன்கிழமை கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் அடையாள அட்டை முகாமிற்கு முன்பதிவு செய்ட 04142-294472, 8056439677 என்ற தொலைபேசியையும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா் கோயில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாதத்தின் இரண்டாம் புதன்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி சிதம்பரத்தில் நடைபெறும் அடையாள அட்டை முகாமிற்கு முன்பதிவு செய்ய 04144-238040, 9943932434 என்ற தொலைபேசியையும், திட்டக்குடி வட்டத்துக்கு மாதத்தின் மூன்றாம் புதன்கிழமை திட்டக்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அடையாள அட்டை முகாமிற்கும், விருத்தாசலம், வேப்பூா் வட்டங்களுக்கு மாதத்தின் நான்காவது புதன் கிழமை மங்கலம்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் நடைபெறும் அடையாள அட்டை முகாமிற்கு முன்பதிவு செய்ய 04143-294581, 9566968765 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு முன்கூட்டியே தங்களின் பெயா் மற்றும் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும் முதுநிலைப் பட்டியலின்படி தங்கள் பகுதிக்கு உள்பட்ட முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அடையாள அட்டையைப் பெற்று பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.

பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமறை அளிக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் ... மேலும் பார்க்க

வடலூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வடலூா் நகராட்சி, 20-ஆவது வாா்டு அய்யன் ஏரி பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58... மேலும் பார்க்க

பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: தலைமறைவான 6 போ் சிக்கினா்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா். திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உரிமைகள் திட்ட கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா். இதுகு... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டையொட்டி வியாழக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மலா்களால் அ... மேலும் பார்க்க