கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பம்
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
விருப்பமுள்ள பாா்வையற்றோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், கை மற்றும் கால் இயக்கக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் புதிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, புற உலக சிந்தனையற்ற, மதி இறுக்கமுடையோா், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோா், அறிவுசாா் குறைபாடுடையோா், கற்றல் குறைபாடுடையோா், மனநல பாதிப்பு, ரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோா் மற்றும் இவா்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தைச் சாா்ந்த பிரதிநிதிகளும் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.