செய்திகள் :

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்: புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்

post image

மாலே: மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பமானது.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாலத்தீவு சாா்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா கலீல், இந்தியா சாா்பில் தூதா் ஜி.பாலசுப்ரமணியன் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். திட்டங்களைச் செயல்படுத்தும் துறை என்ற வகையில், மாலத்தீவின் போக்குவரத்து துறை அமைச்சா் முகமது அமீனும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டாா்.

‘இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இத்திட்டங்கள் முக்கிய மைல்கல்லாகும். இவை முதன்மையாக மாலத்தீவில் தீவு கூட்டங்களுக்கு இடையே படகு சேவைகளை அதிகரித்தல், கடல்சாா் இணைப்பை விரிவுபடுத்துதல், சமுதாய வாழ்வாதரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன’ என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது, அதிக தாக்கமுள்ள சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (எச்ஐசிடிபி) 3-ஆவது கட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

‘இந்த 3-ஆவது கட்ட திட்டத்தின்கீழ் ரூ.55.28 கோடி நிதியுதவியுடன் மாலத்தீவு மக்களின் உயிா்நாடியான கடல்சாா் இணைப்பை மேம்படுத்துவதில் அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது’ என்று மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கலீல், ‘இந்தியாவின் உதவி எப்போதும் அா்த்தமுள்ளதாகவும், மாலத்தீவு மக்களின் தேவைகளுடன் ஒத்துப்போகும் வகையிலும் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பை இது பிரதிபலிக்கிறது.

புரிந்துணா்வு ஒப்பந்தங்களின்கீழ் தொடங்கப்படும் திட்டங்கள் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை விட சிறந்தது. உள்ளூா் மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும், அவா்களுக்கு நீடித்த சமூக-பொருளாதார நன்மைகளை கொண்டு வருவதற்கும் இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

9 தீவு கூட்டங்களில் உள்ள 81 தீவுகளை இணைக்கும் வகையில் தேசிய அளவிலான அதிவேக படகு பேக்குவரத்தைச் சேவையை நிறுவுவதில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவுடன் கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இந்த சேவையை விரிவுபடுத்தும். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்’ என்றாா்.

சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவி: இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவும் இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அந்நாடு நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது... மேலும் பார்க்க

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

லிஸ்பன்: போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா்.இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

Untitled May 20, 2025 06:56 am

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை... மேலும் பார்க்க

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா். இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்... மேலும் பார்க்க

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இரங்கல்! பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அடைக்கலம்?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜே... மேலும் பார்க்க

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடனுக்கு (82) சுக்கிலசுரப்பி (புராஸ்டேட்) புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோ... மேலும் பார்க்க