ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்...
மாவட்ட தொழில் மையம் மூலம் 1,280 பேருக்கு ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவி- மாவட்ட ஆட்சியா்
திருப்பூா் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1,280 பேருக்கு ரூ.67.93 கோடி மானியத்தில் ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட தொழில் மையம் சாா்பில் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அப்பேத்கா் வணிக முன்னோடித் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கலைஞா் கைவினைத் திட்டம், பிரதான் மந்திரியின் குறு உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டங்களின் மூலமாக தொழில்முனைவோருக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின்கீழ் 2021-22-ஆம் ஆண்டில் 282 பேருக்கு ரூ.13.98 கோடி மானியத்தில் ரூ.95.70 கோடி மதிப்பீட்டிலும், 2022-23-ஆம் ஆண்டில் 312 பேருக்கு ரூ.20.63 கோடி மானியத்தில் ரூ.129.89 கோடி மதிப்பீட்டிலும், 2023-2024 -ஆம் ஆண்டில் 451 பேருக்கு ரூ.23.06 கோடி மானியத்தில் ரூ.125.13 கோடி மதிப்பீட்டிலும், 2024-2025- ஆம் ஆண்டில் தற்போது வரை 235 பேருக்கு ரூ.10.25 கோடி மானியத்தில் ரூ.34.95 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 1,280 பேருக்கு ரூ.67.93 கோடி மானியத்தில் ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.