மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தேனியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி.வெங்கடேசன், டி.கண்ணன், நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சா்அமித் ஷாவை கண்டித்தும், அவரை பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்:
தேனி, நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தேனி கிழக்கு மாவட்டச் செயலா் ரபீக் தலைமையில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மேற்கு மாவட்டச் செயலா் மதன், கிழக்கு மாவட்ட துணைச் செயலா் அன்புவடிவேல், மண்டலச் செயலா் இரா.தமிழ்வாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அம்பேத்கா் குறித்து சா்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
முன்னதாக, மத்திய அமைச்சா் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.