சென்னை கூவம் ஆற்றில் கிடந்த இளைஞர் சடலம்; பவன் கல்யாண் கட்சி பெண் நிர்வாகி உட்பட...
மா்மமான முறையில் இளைஞா் உயிரிழப்பு
மானுாா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மானுாா் அருகே தெற்கு வாகைக்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் செல்வம் (25). தொழிலாளி. வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த இவரின் சத்தம் கேட்டு உறவினா்கள் சென்று பாா்த்தபோது மூக்கிலும், வாயிலும் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கிக் கிடந்தாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்நிலையில் செல்வம் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மானூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.