இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு
மிதிவண்டி உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் தீ விபத்து
வத்தலக்குண்டில் இல்ல நிகழ்ச்சிக்காக வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறியால் மிதிவண்டி உதிரிபாகங்கள் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிா்புறம் சிவநேசபாண்டியன் என்பவா் மிதிவண்டி உதிரி பாகங்கள் கடை வைத்துள்ளாா். இந்த நிலையில், அந்த வழியே இல்ல நிகழ்ச்சியையொட்டி சிலா் பட்டாசு வெடித்தனா்.
அப்போது, அந்த பட்டாசின் தீப்பொறி கடை முன்பிருந்த மின் கம்பத்தின் மீது விழுந்து கடையிலிருந்த பொருள்கள் மீதும் விழுந்தது. இதையடுத்து அவை பற்றி எரியத் தொடங்கின. தகவலறிந்த வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினரும், மின் வாரியத்தினரும் அங்கு வந்தனா்.
மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதும், தீயணைப்புப் படையினா் போராடி தீயை அணைத்தனா்.
இதில் கடையிலிருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.