Kerala: காங்கிரஸ் நிர்வாகியை ஸ்டேஷனில் வைத்து தாக்கி பொய் வழக்கு; 4 போலீஸார் சஸ்...
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
திருச்சியில் கழிப்பறைக்கு சென்றபோது அறுந்துகிடந்த மின் வயரை மிதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
திருச்சி, கே.கே.நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் விக்னேஸ்வரன் (27), எலக்ட்ரீசியன். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கழிப்பறைக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு அறுந்துகிடந்த மின்சார வயரை மிதித்தபோது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.