தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின...
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனசேகரன்(52) என்பவர் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக கடந்த 26.8.2025 அன்று திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார் ஆலோசனையின் பேரில் மருத்துவக் குழுவான டாக்டர் ரஜினிகாந்த் பாட்ஷா, டாக்டர் ஜாய் வர்கீஸ், மயக்கவியல் நிபுணர் டாக்டர் விஜய் கண்ணா மற்றும் மருத்துவ பணியாளர்கள் இணைந்து கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
மேற்கூறிய அறுவைச் சிகிச்சைக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் கோபக்குமார் கர்தா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எடுகொண்டலு ஆகியோர் துணை புரிந்தனர்.
வெற்றிகரமான கண்காணிப்பைத் தொடர்ந்து நோயாளி தனசேகரன் கடந்த 5.9.2025 அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தமிழக அரசிடம் முறையான அனுமதி பெற்று. வெற்றிகரமாக மிக அரிய அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டதற்கு திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.