ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
சிறுகனூா், திருப்பட்டூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!
சிறுகனூா், திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறுகனூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சிறுகனூா், ஆவார வள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், சி.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி மற்றும் தச்சன்குறிச்சி பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.